அந்தமான் மற்றும் நிகோபார் தீவு பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
அந்தமான் நிகோபார் தீவுகள் இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்றாகும். இத்தீவுகள் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ளன.
இது இரண்டு தீவுக் கூட்டங்களைக் கொண்டது. அவை அந்தமான் தீவுகள் மற்றும் நிகோபார் தீவுகள் ஆகும். இவை அந்தமான் கடலையும் இந்தியப் பெருங்கடலையும் இணைக்கின்றன. இப்பிரதேசத்தின் தலைநகரம் போர்ட் பிளேர் என்னும் அந்தமானில் உள்ள நகரம் ஆகும்.
8,249 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட அந்தமான் நிகோபார் தீவுகளின் மொத்தம் எண்ணிக்கை 572 ஆகும். இதில் மக்கள் குடியிருக்கும் தீவுகளின் எண்ணிக்கை 36 ஆகும்.
இங்கு கேம்ப்பெல் பே பகுதியில் இருந்து தென்கிழக்கே 2 கி.மீ. தொலைவில் இன்று காலை 6.57 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.