சென்னை,
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரா, நடிகை கீர்த்தி சுரேசும் திருமணம் செய்து கொள்ள போவதாக சமீபத்தில் சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இதனை கீர்த்தி சுரேஷ் மறுத்தாலும் வதந்திகள் தொடர்ந்து வருகின்றன.
சமீபத்தில் அனிருத்துடன் எடுத்துக் கொண்ட போட்டோ ஒன்றை கீர்த்தி சுரேஷ், சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். இதனையடுத்து இருவரும் டேட்டிங் சென்ற வருவதாகவும், தங்களின் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடிவு செய்து, திருமணம் செய்ய முடிவு செய்திருப்பதாக வதந்தி தீயாக பரவியது.
ஆனால் இந்த வதந்தி கொஞ்சமும் ஆதாரமற்றது என இருவருக்கும் நெருக்கமான வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. அத்துடன் இருவரும் நல்ல நண்பர்கள், அவரவர் வேலைகளில் பிஸியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.