அப்துல் காயிம் நியாசியை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முதல் அமைச்சராக தேர்வு செய்துள்ளதாக பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். மேலும் நீண்ட ஆலோசனை மற்றும் பரிந்துரைகளின் மறுஆய்வுக்குப் பிறகு பிரதமர் இம்ரான் கான் அப்துல் காயிம் நியாசியை தேர்ந்தெடுத்ததாக பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தெரிவித்துள்ளது. புதிய முதல் அமைச்சர் தலைமையிலான புதிய அரசு விரைவில் பதவியேற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.