அமமுக பொருளாளர் வெற்றிவேல் கொரோனாவுக்கு பலி

கொரோனாவுக்கு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமமுகவின் பொருளாளர் வெற்றிவேல், சிகிச்சை பலனின்றி சற்று முன் காலமானார்.

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொருளாளராக இருந்து வந்தவர், வெற்றிவேல். கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில்,  அக்டோபர் 6ஆம் தேதி சென்னை போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில், அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லைல் வெண்டிலேட்டர் உதவியுடனேயே அவர் சுவாசித்து வந்தார். இந்த சூழலில் இன்று மாலை அவரது உடல் நிலை மேலும் மோசமாகி, அதை தொடர்ந்து அவரது உயிர் பிரிந்தது.

15 ஆண்டுகளுக்கு முன்னர் அவருக்கு உடல் பருமனுக்காக ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. அதேபோல், 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த காலகட்டத்தில் இதய அறுவை சிகிச்சையும் வெற்றிவேலுக்கு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெற்றிவேல், தனது அரசியல் வாழ்க்கையை, காங்கிரஸ் கட்சியில் இருந்து தொடங்கினார். பின்னர் அதிமுகவில் இணைந்து, 2011 சட்டசபைத் தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

கடந்த 2014ல் சிறை சென்று வந்த ஜெயலலிதா, மீண்டும் போட்டியிடுவதற்காக, ஆர்.கே.நகர் தொகுதியை விட்டுக்கொடுத்த வெற்றிவேல், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானார். 2016 சட்டசபைத் தேர்தலில், பெரம்பூர் தொகுதியில் வெற்றிவேல் நின்று வெற்றி பெற்றார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அதிமுக இரண்டாக பிரிந்தபோது, சசிகலா அணியை வெற்றிவேல் ஆதரித்து வந்தார்.

Translate »
error: Content is protected !!