அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை,
அமீரகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சம் 90 ஆயிரம் 542 டி.பி.ஐ மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகள் செய்யப்பட்டன. இந்த முடிவுகளில் 1,529 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமீரகத்தில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை 6 லட்சம் 47 ஆயிரம் 182 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் 1,506 பேர் நேற்று ஒரே நாளில் குணமடைந்து தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர்.
இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சம் 25 ஆயிரம் 332 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இரண்டு பேர் நேற்று இறந்தனர். இறப்பு எண்ணிக்கை 1,849 ஆக அதிகரித்துள்ளது.கொரோனா தொற்று காரணமாக தற்போது 19 ஆயிரம் 997 பேர் பல்வேறு மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை நாட்டில் மொத்தம் 6 கோடி 20 லட்சம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு கூறப்படுகிறது.