அமெரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு 471 ஆகா உயர்வு

அமெரிக்காவில், புதிய வகை உருமாறிய கொரோனாவால் 471 பேருக்கு பாதிப்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நியூயார்க்,

அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகளவில் உள்ளனஇதனால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தும், கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும் உள்ளனர்இந்நிலையில், அமெரிக்காவில் புதிய வகை உருமாறிய கொரோனா பாதிப்புகளும் அதிகரிக்க தொடங்கியுள்ளன.

இங்கிலாந்து நாட்டில் முதன்முறையாக அடையாளம் காணப்பட்ட உருமாறிய வகையை சேர்ந்த வி..சி. 202012/01 என்ற கொரோனா வைரசானது பிற கொரோனா வைரசுகளை விட எளிதில் பரவ கூடிய ஒன்றாக உள்ளது.

தென்ஆப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட 501Y.V2 என்ற மற்றொரு வகை கொரோனா வைரசானது, உடலில் ஆன்டிஜெனுக்கு எதிராக போராடி சமநிலைப்படுத்தும் ஆன்டிபாடியால் அதிகம் பாதிக்கப்படாத ஒன்றாக உள்ளது.

பிரேசில் நாட்டில் இருந்து கண்டறியப்பட்ட பி1 என்ற கொரோனா வைரசும் இதேபோன்ற பாதிப்புகளுக்கான தன்மைகளை கொண்டுள்ளன. இந்நிலையில், அமெரிக்காவில், புதிய வகை உருமாறிய கொரோனாவால் 471 பேருக்கு பாதிப்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளன

இதனால் அமெரிக்காவில் மற்றொரு கொரோனா அலை பரவி சூறாவளி போல் பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய ஆபத்து உள்ளது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். இந்த பாதிப்புகளில் இங்கிலாந்து நாட்டு தொற்றானது 467 பேருக்கும், தென்ஆப்பிரிக்க தொற்று 3 பேருக்கும் மற்றும் பிரேசில் நாட்டு வைரசின் தொற்று ஒருவருக்கும் உள்ளது என அந்நாடு உறுதி செய்துள்ளது.

 

Translate »
error: Content is protected !!