அமெரிக்காவில் 150 நாட்களில் 30 மில்லியன் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தபட்டுள்ளதாக அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இதை பற்றி அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கை,
* அமெரிக்காவில், 150 நாட்களில் 30 மில்லியன் கொரோனா தடுப்பூசி மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளன.
* 150 நாட்களுக்கு இதற்கு முன்பு அமெரிக்காவில் நிலைமை எப்படி இருந்தது என்பதை நினைவில் கொள்க. எல்லா அமெரிக்கர்களுக்கும் போதுமான தடுப்பூசி என்பது நம்மிடம் இல்லை.
* ஆனால் அதை மாற்ற நாம் ஒன்றிணைந்து பணியாற்றியுள்ளோம் என்று ஜனாதிபதி பைடன் கூறியுள்ளார்.
* கொரோனா வைரஸ் தொடர்ந்து “டெல்டா பிளஸ்” ஆக உருவாகி வருவதாகவும், அதிலிருந்து பாதுகாக்க பொது மக்கள் அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.