அமெரிக்காவில் 32.8 கோடி தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன

உலகில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கொரோனா வைரஸால் அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான அரசாங்கம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

மாடர்னா, ஃபைசர் / பையோஎன்டெக் மற்றும் ஜான்சன் & ஜான்சன் ஆகியோரால் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகள் அமெரிக்காவில் உள்ள பொது மக்களுக்கு செலுத்த பட்டு வருகிறது. அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 32,81,52,304 தடுப்பூசி மருந்துகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக யு.எஸ். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவித்துள்ளன. ஜூன் 30 (புதன்கிழமை) நிலவரப்படி மொத்தம் 32,65,21,526 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளன. அமெரிக்காவில் 18,13,39,416 பேருக்கு இதுவரை முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், 15,58,84,601 பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி கிடைத்துள்ளதாகவும் யு.எஸ். சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

 

Translate »
error: Content is protected !!