அமெரிக்கா ஒரே நேரத்தில் நான்கு வரலாற்று நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது என அமெரிக்க ஜானாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் கூறி உள்ளார்.
அமெரிக்க ஜானாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் தனது நாடு “ஒரே நேரத்தில் நான்கு வரலாற்று நெருக்கடிகளை” எதிர்கொண்டுள்ளதாகக் கூறினார், மேலும் காலவரையறை சவால்களை சமாளிக்க தனது குழு கடுமையாக உழைத்து வருவதாகவும் கூறினார்.
“கொரோனா தொற்று ,பொருளாதாரம், காலநிலை மாற்றம் மற்றும் இன நீதி வரை – நமது தேசம் ஒரே நேரத்தில் நான்கு வரலாற்று நெருக்கடிகளை எதிர்கொள்கிறது. மேலும் ஜனவரி மாதத்தில் வீணடிக்க நேரமில்லை. அதனால்தான் நானும் எனது அணியும் தயாராகி வருகிறோம் ”என்று கூறி உள்ளார்.
ஜோ பைடன் தனது டுவிட்டரில் கூறி இருப்பது, கொரோனா தொற்று மற்றும் பொருளாதாரம் முதல் காலநிலை மாற்றம் மற்றும் இன நீதி வரை – நமது நாடு ஒரே நேரத்தில் நான்கு வரலாற்று நெருக்கடிகளை எதிர்கொள்கிறது. வீணடிக்க நேரம் இருக்காது. அதனால்தான் நானும் எனது அணியும் முதல் நாளில் நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருகிறோம் என்று கூறினார்.
ஜோ பைடன் டொனால்ட் டிரம்ப் “பொறுப்பைக் கைவிடுவதாக” குற்றம் சாட்டியதோடு, நிலுவையில் உள்ளகொரோனா நிவாரண மசோதாவில் உடனடியாக கையெழுத்திட டிரம்பிற்கு அழுத்தம் கொடுத்தார். ஜோ பைடனின் டுவீட்டிற்கு சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஜனாதிபதி டிரம்ப் கொரோனா வைரஸ் நிவாரணம் மற்றும் அரசாங்க செலவு மசோதாவில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டார்