அமெரிக்க மக்கள் அனைவருக்கும் ஜூலைக்குள் தடுப்பூசி செலுத்தப்படும்….ஜோ பைடன்

அமெரிக்கர்கள் அனைவருக்கும் ஜூலைக்குள் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேட்டி அளித்தபோது, அனைத்து அமெரிக்கர்களுக்கும் எப்போது தடுப்பூசி போடப்படும் என்று கேள்வி கேட்கப்பட்டது. இந்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் எங்களிடம் 600 மில்லியன் அளவுக்கு தடுப்பு மருந்து இருக்கும். இது ஒவ்வொரு அமெரிக்கர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கு போதுமானது. குழந்தைகள் விரைவில் பள்ளிகளுக்கு திரும்ப நான் விரும்புகிறேன்.

அடுத்த கிறிஸ்துமசுக்குள் நாம் மிகவும் மாறுபட்ட சூழ்நிலையில் இருப்போம்என்றார். இதற்கு முன்பு ஜோபைடன், அனைவருக்கும் தடுப்பூசிகள் வசந்த காலத்துக்குள் கிடைக்கும் என்று தெரிவித்து இருந்தார். ஆனால், தடுப்பூசிகள் கிடைப்பது மற்றும் அவற்றை வினியோகிப்பதற்காக சிரமங்களை வெள்ளை மாளிகை சுட்டிக்காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Translate »
error: Content is protected !!