அம்பத்துாரில் சிக்கிய 700 கிலோ குட்கா: பெட்டிக் கடைக்காரர் கைது

சென்னை, அம்பத்தூரில் போலீசார் நடத்திய அதிரடி ரெய்டில் பெட்டிக்கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 700 கிலோ குட்கா புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னை, அம்பத்துார், மேனாம்பேடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கு விற்பனை நடைபெறுவதாக அம்பத்துார் துணைக்கமிஷனர் தீபாசத்யனுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் துணைக்கமிஷனரின் தனிப்படை எஸ்ஐ விஜயகுமார் மற்றும் தலைமைக்காவலர்கள் பலராமன், வாசுதேவன், நிர்மல் குமார், சசிக்குமார், ரவிந்திரன், முதல் நிலைக் காவலர் மாரிமுத்து ஆகியோர் அடங்கிய காவல் குழு மேனாம்பேடு பகுதியில் நேற்று இரவு அதிரடி ரெய்டு நடத்தினர். அப்போது மேனாம்பேடு, முனுசாமி கோயில் தெருவில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் சோதனை நடத்திய போது அங்கு 700 கிலோ ஹான்ஸ் மற்றும் புகையிலை குட்கா சிக்கியது. அதனையடுத்து கடை உரிமையாளர் அம்பத்துார் கள்ளிக்குப்பத்தைச் சேர்ந்த நீதிமான் (வயது 35) என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நீதிமான் விசாரணைக்குப் பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

Translate »
error: Content is protected !!