தமிழகத்தில் ஒரு மாத காலத்தில் நோய் தொற்று 50 சதவீதமாக குறைந்திருக்கின்றது என அமைச்சர் பெரியகருப்பன் கோவையில் செய்தியாளர்களிடம் கூறினார்.
அவர் கூறியது,
கோவையில் அதிமுக எம்.எல்.ஏ–க்கள் உதவிகள் என்ற பெயரில் அரசியல் ஆதாயத்திற்காக குட்டையை குழப்பும் வேலையை செய்ய கூடாது..!
“நோயில் இருப்பவர்களுக்கு உதவுகின்றேன்” என்ற போர்வையில் மக்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்த கூடாது..! என ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.