தேனி மாவட்டம் போடி பெருமாள் கோயில் அருகே இரண்டாம் நம்பர் அரசு நியாய விலைக் கடைகள் அரசு நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்காக வழங்கவேண்டிய பொருட்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்யாமல் கடையின் ஊழியர் ரவி என்பவர் மொத்தமாக தனியாருக்கு விலைக்கு விற்று கேரளாவிற்கு அரிசிபருப்பு உள்ளிட்ட பொருட்களை கடத்துவதாக கூறி பெருமாள் கோயில் முக்கிய சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது ரேஷன் கடை ஊழியர் ரவி பொதுமக்களை ஒருமையில் பேசுவதாகவும் ரேஷன் பொருட்களை கடத்தும் அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி நியாய விலை கடையில் பொருட்கள் முறையாக விநியோகம் செய்யப்படும் எனவும் மற்றும் ஒருமையில் பேசிய ஊழியர் ரவியை மாற்றம் செய்யப்படும் எனவும் உறுதி அளித்த பின்னர் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.