அருணாச்சல பிரதேச எல்லையில் புதிய கிராமத்தையே உருவாக்கிய சீனா! சாட்டிலைட் மூலம் தெரியவந்தது

அருணாச்சல பிரதேசம் திபேத்தின் ஒரு பகுதிதான் என்று, சீனா மீண்டும் நியாயப்படுத்தி பேசி, இந்தியாவுடன் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கிழக்கு லடாக் எல்லை பகுதியில், அத்துமீறி சீன ராணுவம் நுழைந்ததையடுத்து இரு நாட்டு படைகளும் எட்டு மாதங்களுக்கு மேலாக குவிக்கப்பட்டுள்ளன. பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும், பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை.

இந்நிலையில், நம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தின் எல்லையில், ஒரு புதிய கிராமத்தை சீனா உருவாக்கி வருகிறது. அங்கு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. அருணாச்சல பிரதேசத்தை, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள திபெத்தின் ஒரு பகுதி என சீனா தொடர்ந்து கூறி வருகிறது.

இந்நிலையில் அங்கு கட்டுமானம் மேற்கொள்வது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து, சீன வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ஹூவா சுன்யிங் கூறிகையில், தெற்கு திபெத் பிராந்தியம் குறித்த சீனாவின் நிலைப்பாடு, எப்போதும் தெளிவாக உள்ளது. அருணாச்சல பிரதேசத்தை நாங்கள் அங்கீகரிக்கவில்லை. அது திபெத்தின் ஒரு பகுதி தான்.

எங்கள் சொந்த எல்லைக்குட்பட்ட பகுதியில், நாங்கள் கட்டுமான பணிகள் மேற்கொள்வது இயல்பான ஒன்று. அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது என கூறியுள்ளார். இந்நிலையில் மேல சுபன்ஸ்ரீ மாவட்டத்தை சீன பகுதியாக சித்தரித்து உரிமை கொண்டாடும் சீனாவின் இந்த போக்கை, அனைத்து அருணாசல பிரதேச மாணவர்கள் யூனியன் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்து எச்சரித்துள்ளது.

 

Translate »
error: Content is protected !!