ஆண்டுக்கு இருமுறை ‘நீட்’ தேர்வு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி,

எம்பிபிஎஸ் படிப்பின் சேர்க்கைக்காக தேசிய அளவில்நீட்தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இதில் மாணவர்கள் சிலர் வெற்றிபெற முடியாமல் தற்கொலை வரை சென்றுவிடுகின்றனர். இந்த நிலையில் மாணவர்களின் மன உளைச்சலைப் போக்கும் நோக்கத்தில் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய அரசின் உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களான ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி போன்றவற்றில் சேர்ந்து படிக்க ஜேஇஇ என்ற ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இது ஆண்டுக்கு இரண்டு முறை நடக்கிறது. இதன் மூலம் மாணவர்கள் இரண்டு முறை தேர்வில் பங்கேற்கலாம்.

இதில் எந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அதைக்கொண்டு இந்தத் தொழில்நுட்ப உயர்கல்வியில் சேர்ந்து படிக்கலாம். மாணவர்களின் மன உளைச்சலைப் போக்குவதற்காகவே இந்த நுழைவுத் தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படுகிறது.

அதேபோல் மாணவர்களின் மன உளைச்சலைப் போக்கும் நோக்கத்தில் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வையும் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

தற்போது எம்பிபிஎஸ், பிடிஎஸ், இளநிலை மருத்துவப் படிப்புக்கானநீட்நுழைவுத் தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இனி ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும்என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய தேசிய தேர்வுகள் முகமை அதிகாரி ஒருவர், “நீட் தேர்வின் புதிய நடைமுறை இந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது. இரண்டு நீட் தேர்வுகளில் எதில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அதைக்கொண்டு மருத்துவப் படிப்பில் சேரலாம் என்று கூறி உள்ளார்.

 

Translate »
error: Content is protected !!