ஆன்லைனில் கந்து வட்டி பிஸ்னஸ்: சீனர்கள் உள்பட நால்வர் கைது

‘‘லோன் ஆப்’’ மூலம் நுாதன முறையில் கந்து வட்டி பிஸ்னசில் ஈடுபட்டு மெகா மோசடியில் ஈடுபட்ட சீன நாட்டைச் சேர்ந்த இருவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் பெங்களூருவில் கால் சென்டர் நடத்தி சென்னை உள்பட இந்தியா முழுவதும் பலரிடம் அதிக வட்டிக்கு கடன் வசூலித்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

சென்னை, வேங்கைவாசலை சேர்ந்தவர் கணேசன். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். கடந்த மார்ச் மாதம் லாக்டவுனில் வேலை இழந்து பணத்துக்காக கஷ்டப்பட்டதால் சமூக வலைதளங்களில் ‘ஆன்லைன் இன்ஸ்டன்ட் லோன்’ என்ற ஆப் மூலம் கணேசன் கடன் பெற முயன்றுள்ளார். ‘எம் ரூப்பி’ என்ற பெயரில் இருந்த ஒரு ஆப்பில் ரூ. 5 ஆயிரம் கடன் தருவதாகவும் பேன்கார்டு, ஆதார் அட்டை, புகைப்படம் ஆகியவற்றை அனுப்பும்படி கேட்டனர். அதனை அவர்கள் பெற்றுக் கொண்டு எனக்கு ரூ. 5 ஆயிரம் கடன் வழங்கினர். பின்னர் ஒரு வாரத்திற்கு ரூ.1, 500 அதிக வட்டியாக பிடித்துக்கொண்டு ரூ. 3,500 எனது வங்கிக் கணக்கில் போட்டனர். 7 நாட்களில் 5 ஆயிரம் செலுத்த வேண்டும் என அவர்கள் நிபந்தனை போட்டதால் தொடர்ந்து கணேசனால் வட்டி செலுத்த முடியவில்லை. அவர் தர மறுத்ததால் வாட்ஸ்அப்பிலும், செல்போனிலும் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்துள்ளனர்.

அது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசில் கணேசன் புகார் அளித்தார். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் தேன்மொழி மேற்பார்வையில் போலீசார் விசாரணை நடத்தினர். ‘எம் ருப்பி’ போன்று சுமார் 50க்கும் மேற்பட்ட ஆன்லைன் உடனடி லோன் ஆப்கள் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ளதும் அவற்றில் பெரும்பாலானவை பெங்களூருவில் செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது. அதனையடுத்து தனிப்படை போலீசார் அது தொடர்பாக பெங்களூரு சென்று இந்த மோசடியில் தொடர்புடைய பிரமோதா, பவான் மற்றும் சீனாவைச் சேர்ந்த க்ஸியோ யமஓ, வு யுவாலுன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

இவர்கள் மை கேஷ், அரோரா லோன், குயிக் லோன், டிஎம் மணி, ரேபிட் லோன், ஈசி கேஷ், நியூ ருப்பீ, ரூப்பி லோன் ஆகியன உள்பட பல்வேறு பெயர்களில் ஆன்லைன் உடனடி லோன் ஆப்கள் மூலம் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு குறுகிய காலத்திற்கு அதிக வட்டிக்கு லோன் என்று ஆசைகாட்டி பணம் வசூலித்து வந்துள்னர். அவர்களிடமிருந்து லேப்டாப், கைபேசிகள், கம்பெனி ஆவணங்கள் ஆகியவைகளை போலீசார் கைப்பற்றினர். சென்னைக்கு அழைத்து வரப்பட்ட அவர்கள் தாம்பரம் கோர்ட்டில் ஆஜர் செய்து நீதிமன்றக் காவலில்
வைக்கப்பட்டனர்.

Translate »
error: Content is protected !!