இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி அடுத்ததாக 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி இந்திய அணி பேட்டிங் செய்தது.
இந்திய அணி முன்னணி வீரர் ஷிகர் தவான் 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். கேப்டன் விராட் கோலி 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். சஞ்சு சம்சன் 23 ரன்களிலும் மனிஷ் பாண்டே 2 ரன்களிலும் ஹர்திக் பாண்ட்யா 16 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே எல் ராகுல் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஜடேஜா 23 பந்துகளில் 44 ரன்கள் அடித்தார்.