இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,432 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 252 பேர் உயிரிழப்பு
டெல்லி,
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,02,24,303-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,48,153-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 98,07,569-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 16,432 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 24,900 பேர் குணமடைந்துள்ளதாகவும், 252 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது