இந்தியாவில் கோரோனோ பாதிப்பு ஒரு கோடியை தாண்டியது

 இந்தியாவில் கொரோனாவின் ராட்சத அலை தணிந்து வருகிறது. சுமார் ஒரு லட்சத்தை தொடும் புதிய தொற்றுகளை பெற்ற நாட்கள் அனைத்தும் தற்போது மறைந்து விட்டன. 30 ஆயிரத்துக்கும் குறைவான புதிய பாதிப்புகளே தற்போது நிகழ்ந்து வருகின்றன.

அதேநேரம் கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கையோ நிலையாக அதிகரித்து வருகிறது. புதிய பாதிப்புகளை விட, புதிதாக குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கைதான் தினந்தோறும் அதிகமாக தொடர்கிறது. அந்தவகையில் இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்திலும் 29 ஆயிரத்து 885  பேர் குணமடைந்து உள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் குணமடைந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 95 லட்சத்தை கடந்து விட்டது. அதாவது 95 லட்சத்து 50 ஆயிரத்து 712பேர் இதுவரை மீண்டு விட்டனர்.

 இதற்கிடையே மேற்படி 24 மணி நேரத்தில் 25 ஆயிரத்து 152 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். இதன் மூலம் இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 99,79,447-ல் இருந்து 1,00,04,599 ஆக உயர்ந்துள்ளது. இதைப்போல இன்று காலை வரையிலான ஒரு நாளில் மேலும் 347 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி மரணத்தை தழுவி இருக்கின்றனர்.

இதனால் நாடு முழுவதும் இதுவரை நிகழ்ந்துள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 45 ஆயிரத்து 136 ஆகியிருக்கிறது.மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை இன்று மேலும் சரிந்து 3 லட்சத்து 08 ஆயிரத்து 751 ஆகியிருக்கிறது. இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 95.46% உயிரிழப்பு விகிதம் 1.45% ஆக உள்ளது.

 

 

 

 

 

Translate »
error: Content is protected !!