இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி  374/6 (50 ஓவர்கள்) குவிப்பு

சிட்னி,
 இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி துறைமுக நகரான சிட்னியில் இன்று நடைபெறுகிறது.  இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இதனை தொடர்ந்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வார்னர் மற்றும் பின்ச் தொடக்கத்தில் இருந்தே அடித்து ஆடினர்.  இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. பின்ச் 114 (124 பந்துகள் 9 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) எடுத்தும், வார்னர் 69 (76 பந்துகள் 6 பவுண்டரிகள்) எடுத்தும் ஆட்டமிழந்தனர்.  அந்த அணியின் ஸ்மித் அதிரடியாக ஆடி அணிக்கான ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
அவர் 105 (66 பந்துகள் 11 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்துள்ளார்.  பின்னர் வந்த ஸ்டாய்னிஸ் ஒரு பந்தில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.  மேக்ஸ்வெல் 45, லாபஸ்சக்னே 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கேரி 17, கும்மின்ஸ் 1 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 374 ரன்கள் எடுத்திருந்தது.  இதனால் இந்திய அணி வெற்றி பெற 375 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
Translate »
error: Content is protected !!