இந்தியா – இங்கிலாந்து 2வது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட்: ரசிகர்கள் உற்சாகமாக வாங்கிச் சென்றனர்

சென்னை,

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்தியாஇங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 2வது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட்டை ரசிகர்கள் உற்சாகமாக வாங்கிச் சென்றனர்.

இந்தியா-– இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 5–ந் தேதி தொடங்கி 9–ந் தேதி வரை நடைபெற்றது. இதில் இங்கிலாந்து 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து தொடரில் 1-–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. .

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முதல் டெஸ்ட் போட்டியை காண ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்..சிதம்பரம் ஸ்டேடியத்தில் 13-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கு 50 சதவீத ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து கொரோன தடுப்பு நடவடிக்கையாக டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் 8–ந் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. டிக்கெட் விலை ரூ.100, ரூ.150, ரூ.200 என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. விற்பனை தொடங்கிய அரை மணி நேரத்துக்குள் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன.

ஆன்லைனில் பெறப்படும் ரசீதைக் கொண்டு இன்று (11 ஆம் தேதி) விக்டோரியா ஹாஸ்டல் சாலையில் இருக்கும் பூத்தில் போட்டிக்கான டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று காலை முதலே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்த கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமாக திரண்டனர்.

வர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆன்லைலின் முன்பதிவு செய்த டிக்கெட் ஆவணத்தை காட்டி ஒரிஜினல் டிக்கெட்டுகளை பெற்றுக் கொண்டனர். நீண்ட இடைவெளிக்கு பின்னர் கிரிக்கெட் போட்டியை நேரில் பார்க்க வாய்ப்பு கிடைத்திருப்பதால் டிக்கெட் கையில் கிடைத்த உடன் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 

Translate »
error: Content is protected !!