இயற்கை மூலிகை சாறுகளை உண்டு இரண்டு ஆண்டுகளாக கொரொன நோய்த் தொற்று தாக்காமல் தற்காத்துக் கொண்ட பழங்குடியின மலைவாழ் மக்கள்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மஞ்சளாறு அணைக்கு மேல் ராசிமலை என்னும் இடத்தில் பழங்குடியின மலைவாழ் மக்கள் 35 குடும்பங்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பாக மலைப்பகுதிகளிலும் அடர்ந்த வனப் பகுதிகளிலும் வாழ்ந்து வந்தவர்கள் கால சூழ்நிலைக்கு ஏற்ற மாற்றத்தினால் தற்பொழுது இராசிமலை அடிவாரத்தில் அரசாங்கம் வழங்கிய இடத்தில் குடிசைகள் அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்று கடந்த ஆண்டு தாக்கிய போதும் பழங்குடியின மலைவாழ் மக்கள் ஒரு நபருக்கு கூட நோய்த்தொற்று பாதிக்காத நிலையில் இந்த ஆண்டும் கொரோனா தொடரின் இரண்டாவது அலையின் போதும் பழங்குடியின மலைவாழ் மக்கள் பாதிக்காதவாறு ஊர் கட்டுப்பாடுடன் இருந்து இயற்கையில் கிடைக்கும் மூலிகை பொருட்களை கொண்டு கசாயம் காய்ச்சி குடித்து ஒருவருக்குக்கூட நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாத்து வருகின்றனர்.
இதுகுறித்து பழங்குடியின மலைவாழ் மக்கள் கூறுகையில் நோய்த்தொற்று பரவத் தொடங்கியது முதல் தங்கள் பகுதி மக்கள் யாரும் தேவையின்றி வெளியில் எந்த இடத்திற்கும் எங்கும் செல்லாமல் இருந்தோம் உணவு தேவைக்காக ஒரு சிலரை அனுப்பி மட்டுமே அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி உட்கொண்டு வந்ததாகவும் பழங்குடியின மக்களின் மூதாதையர் கற்றுக்கொடுத்த இயற்கையில் கிடைக்கும் மூலிகை பொருட்களை கொண்டு கசாயம் காய்ச்சி குடும்பங்களில் உள்ள அனைத்து நபர்களும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை உட்கொண்டதால்,
தங்கள் கிராம மக்களின் ஒருவருக்குக்கூட நோய்த்தொற்று ஏற்படாமல் பாதுகாத்து வருவதாகவும் தங்கள் பகுதி மக்கள் எந்த ஒரு நோய்க்கும் ஊசி போடுவதற்காக மருத்துவமனைக்கு கூட செல்வதை தவிர்த்து இயற்கையோடு இயற்கை மூலிகைகளை உண்டு வாழ்வதால் தாங்கள் நோய்களில் இருந்து தப்பித்து வாழ்வதாக பழங்குடியின மலைவாழ் மக்கள் பெருமிதம் கொள்கின்றனர்.