இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 1234 போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்கள்

இராமநாதபுரம்.,

மாவட்டம் முழுவதும் 1234 போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்களில்,4912 பணியாளர்களை கொண்டு 1,14,136 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க திட்டம்மாவட்ட ஆட்சியர்: மாவட்டம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கியது.

ராமநாதபுரம் நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாமை சுகாதாரதுறை துணை இயக்குனர் பொற்கொடி தொடங்கி வைத்தார். போலியோ சொட்டு மருந்து இளம்பிள்ளை வாதம் என்ற நோயை தடுக்கும் தடுப்பு மருந்தாகும்.

போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று இந்தியாவில் உள்ள 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கொடுக்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 1234 போலியோசொட்டு மருந்து மையங்களில் 4912 பணியாளர்களை கொண்டு 1,14,136 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் போலியோ சொட்டு முகாம் மாவட்டம் முழுவதிலுமுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் வட்டாரசுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள்அங்கன்வாடி மையங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, மாவட்டம் முழுவதும்  27 சிறப்பு குழுக்கள் மற்றும் 33 நடமாடும் குழுக்கள் மூலம் தற்காலிக குடியிருப்புகள் , கோவில் திருவிழாக்கள்,பேருந்து  நிலையங்கள் , இரயில் நிலையங்கள், திருமண நிகழச்சிகள் மற்றும் இலங்கை அகதிகள் முகாம் ஆகிய இடங்களில் உள்ள 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, நேற்று (31-01-2021) நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாம்களில் தங்களது 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி பயனடையுமாறு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தியுள்ளார்.

Translate »
error: Content is protected !!