இரிடியம் விற்பனை செய்வதாக கூறி ரூபாய் 26.20 கோடி…! சினிமாப்பட இசையமைப்பாளரை போலீசார் கைது

சென்னை,

அரியவகை இரிடியம் விற்பனை செய்வதாக கூறி ரூ. 26.20 கோடி மோசடி செய்த சினிமாப்பட இசையமைப்பாளரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, வளசரவாக்கம், ஜானகி நகர், நெடுமாறன் தெருவில் வசிக்கும் வெங்கடாசலம் என்பவரின் மகன் நெடுமாறன் (68).  இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது,

‘‘கடந்த 2013ம் ஆண்டு அறிமுகமான அம்ரிஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் தங்களிடம் அரிய வகை இரிடியம் பொருள் , (ரைஸ் புல்லிங்) இருப்பதாகவும் அதன் மதிப்பு பல கோடி என்றும் அதனை வெளிமார்கெட்டில் விற்பனை செய்தால் அதிக,

லாபத்திற்கு விற்கலாம் என்று ஆசை வார்த்தைகள் கூறினர். அதனை நம்பி ரூ. 26.20 கோடி வரை கொடுத்தேன். பணத்தை பெற்றுக்கொண்டு போலியான இரிடியம் பொருளை கொடுத்து என்னை மோசடி செய்து விட்டார். அம்ரிஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியிருந்தார்.

கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அது தொடர்பாக விசாரணை நடத்தினர். இதில் அம்ரிஷ் மோசடி செய்தது உண்மை என தெரியவந்தது. அதனையடுத்து தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீசார்

கைது செய்தனர்விசாரணைக்குப் பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கைதான அம்ரிஷ் பிரபல நடிகை ஜெயசித்ராவின் மகன் ஆவார். இவர் நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள மொட்டசிவா, கெட்ட சிவாபிரபுதேவா நடித்த சார்லின் சாப்ளின்2, சிவலிங்கா உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!