இறங்கி வந்த ராமதாஸ்! டீலை முடித்த எடப்பாடியார்!! அதிமுகவுடன், பாமக கூட்டணி உறுதி

இன்று மாலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது கிரீன்வேஸ் சாலை இல்லத்திற்கு சென்று பாமக நிறுவனர் ராமதாஸ் சந்திக்கிறார்

தனித்து போட்டியிட்டால் கடந்த முறையை போல் இந்த முறையும் வாக்குகளை மட்டுமே பிரிக்க முடியும் என்பதை புரிந்து கொண்டதால் வேறு வழியில்லாமல் அதிமுகவுடன்பாமக கூட்டணியை உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 20 சதவீத தனி இடஒதுக்கீடு கோரி ராமதாஸ் கடந்த மூன்று மாதங்களாக போராட்டம் நடத்தி வருகிறார். இதனால் பாமகஅதிமுக கூட்டணி நீடிக்குமா என்கிற சந்தேகம் வந்தது. வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கவில்லை என்றால் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்கிற ரீதியில் ராமதாஸ் அறிவித்தார்.

இதனால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் அதிமுகபாமக கூட்டணிப் பேச்சுவார்த்தை நேற்று காலை மீண்டும் தொடங்கியுள்ளது. சென்னையில் உள்ள மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி வீட்டில், அமைச்சர்கள் சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உள்ளிட்டோருடன் பாமக தலைவர் ஜி.கே.மணி, .கே.மூர்த்தி உள்ளிட்டோர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

வன்னியர்களுக்கான தனி இடஒதுக்கீடு பேச்சுவார்த்தை இது என்று பாமக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் தனி இடஒதுக்கீடு பேச்சுவார்த்தையை ஏன் பாமக குழுவினர் அதிமுக நிர்வாகிகளுடன் நடத்த வேண்டும் என்கிற கேள்வி எழுந்தது. இதன் பின்னர் வெளியான தகவல்களின் படி, நடைபெற்றது கூட்டணி பேச்சுவார்த்தை தான் என்பது உறுதியாகியுள்ளது.

வன்னியர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் தனி இடஒதுக்கீடு விவகாரத்தில் முதற்கட்டமாக சில வாக்குறுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுனர் ராமதாசிற்கு கொடுத்துள்ளதாக கூறுகிறார்கள். இது ஏற்றுக் கொள்ளும்படி இருந்த காரணத்தினால் தான் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு ராமதாஸ் இறங்கி வந்ததாக சொல்கிறார்கள்.

வரும் 14ந் தேதி பிரதமர் மோடி சென்னை வர உள்ளார். அதற்குள் கூட்டணி தொகுதிப் பங்கீட்டை முடிக்க அதிமுக திட்டமிட்டுள்ளது. இதன்படியே பாமக குழுவினரை அழைத்து அதிமுக பேசியுள்ளது. நேற்றைய பேச்சுவார்த்தையில் பாமகவிற்கு எத்தனை தொகுதிகள் என்பதில் முடிவு எட்டப்பட்டு விட்டதாக சொல்கிறார்கள்.

எந்தெந்த தொகுதிகள் என்பது தொடர்பாகவே பாமக தற்போது அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதிலும் ஓரிரு நாளில் முடிவு எட்டப்படும் என்று சொல்லப்படுகிறதுஇதனிடையே விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் இருந்து பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று சென்னை வந்துவிட்டார்

தற்போது தனது மகள் வீட்டில் ராமதாஸ் தங்கியிருப்பதற்கு காரணமே தனி இடஒதுக்கீடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மிக முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் அப்போது ராமதாஸ் உடன் இருக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து கடந்த நாடாளுமன்ற தேர்தலை போலவே நட்சத்திர ஓட்டலில் பாமகஅதிமுக தலைவர்கள் சந்தித்து சட்டப்பேரவை தேர்தல் கூட்டணியை அறிவிப்பதோடு பாமகவிற்கான தொகுதி ஒதுக்கீட்டு விவரங்கள் அறிவிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

அதிமுகவை பொறுத்தவரை திமுகவை எதிர்க்க வலுவான கூட்டணி அவசியம் என்று கருதுகிறது. எனவே தற்போதைக்கு பாமக கோரிக்கைகளில் சிலவற்றை ஏற்பது தான் சரியாக இருக்கும் என்று அந்த கட்சி முடிவுக்கு வந்துள்ளது. எனவே தான் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு விவாரத்தில் தற்போதைக்கு ஒரு நல்ல முடிவுக்கு அதிமுக வந்துள்ளதாக கூறுகிறார்கள்

Translate »
error: Content is protected !!