இஸ்ரேலில் தொற்றுநோய்களுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 2,438 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் 17 முதல் நோயாளிகளின் எண்ணிக்கையில் இந்த அளவுக்கு உயர்வது இதுதான் முதல் தடவையாகும்.
இஸ்ரேல் நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சம் 42 ஆயிரம் 890 ஆக அதிகரித்துள்ளது. வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 6,428 ஆக அதிகரித்துள்ளது. . தீவிர பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 31 முதல் 34 ஆக உள்ளது. கொரோனா நோய்த்தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை இதுவரை 8 லட்சம் 34 ஆயிரம் 024 ஆக உள்ளது. இஸ்ரேலின் மக்கள் தொகையில் சுமார் 60.5 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.