ஈரானில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளதால் ஒரே நாளில் 32,511 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39 லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும், ஒரே நாளில் 366 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு இறப்பு எண்ணிக்கை 91,000 ஐ நெருங்குகிறது. 33.85 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். 4.27 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் சிகிச்சை பெறுகின்றனர் என்று ஈரான் நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது