உடல் எடையை குறைத்த சிம்பு

லாக்டவுனின் போது சிம்பு ஸ்லிம் ஆனதாக ஒரு தகவல் தீயாய் கோலிவுட் வட்டாரத்தில் பரவியது. அவர் தற்போது 90 கிலோ வரை சென்ற அவர் 75 கிலோவாக உடல் எடையைக் குறைத்து விட்டதாகக் கூறப்பட்டு வந்தது.

இதனால் அவரது புதிய தோற்றத்தைக் காண ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். இது ஒருபுறம் இருக்க விரைவில் ‘மாநாடு’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார் சிம்பு. அதற்கு முன்னதாக சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு திண்டுக்கலில் நடக்கிறது. இதற்காக மதுரை வந்த சிம்பு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் சென்று வந்துள்ளார் சிம்பு. அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் சிம்பு உடல் எடைக் குறைந்து மெலிந்து காணப்படுகிறார். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!