உதயநிதி ஸ்டாலின் கைது: புதுக்கோட்டை புது பஸ் ஸ்டாண்டில் எம்எல்ஏ தலைமையில் மறியல்

திருவாரூரில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து புதுக்கோட்டை புது பஸ் ஸ்டாண்டில் மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.

சட்டமன்றத் தேர்தல் வருவதற்கு இன்னும் ஐந்து மாத காலம் இருக்கும் நிலையில் திமுக அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தற்போது தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருவாரூரில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்க இருந்தார். இதற்கு போலீசார் தடை விதித்தனர். இதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியது. உதயநிதி ஸ்டாலினை கைது செய்யப்பட்டதை கண்டித்தும் அவரை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நூற்றுக்கணக்கான திமுகவினர் நேற்று மறியில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ண அரசு தலைமையில் இந்த மறியல் நடந்தது. இதனால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனையடுத்து போலீசார் நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினரை கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அவர்களை பஸ்சில் ஏற்றி வேறு இடத்துக்கு அழைத்துச் சென்று தங்க வைத்து பின்னர் ஜாமினில் விடுவித்தனர்.

Translate »
error: Content is protected !!