உயிரிழந்த காவல் ஆளிநர்களின் குழந்தைகள் 96 பேருக்கு ரூ. 10.75 லட்சம் கல்வி நிதியுதவி * போலீஸ் கமிஷனர் வழங்கினார்

கடந்த 2 ஆண்டுகளில் உயிரிழந்த காவல் ஆளிநர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 96 குழந்தைகளுக்கு படிப்புச் செலவுக்காக ரூ. 10.75 லட்சம் நிதியுதவியை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வழங்கினார்.


சென்னை நகர காவல்துறையில் பணிபுரிந்து கடந்த 2 ஆண்டுகளில் இறந்த காவலர் குடும்பங்களுக்கு வேண்டிய உதவிகள் தொடர்பான நடவடிக்கைகளை கமிஷனர் மகேஷ்குமார் செய்து வருகிறார்.

காவலர்கள் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் கல்வி கட்டணம் செலுத்த பொருளாதார வளர்ச்சி, அறிவு வளர்ச்சி சார்ந்த சேவைப் பணிகள் செய்து வரும் சர்வதேச சமண வர்த்தக அமைப்பினர் இறந்த காவலர்களின் படிக்கும் குழந்தைகளுக்கு கல்வித்தொகை வழங்க உதவ முன்வந்தனர்.

அதன்பேரில், மறைந்த காவலர் குடும்பத்தைச் சேர்ந்த 96 மாணவ, மாணவிகளுக்கு பள்ளி மற்றும் கல்லூரி கல்வி தொகைக்கான ரூ.10 லட்சத்து 75 ஆயிரத்துக்கான காசோலையை சர்வதேச சமண வர்த்தக அமைப்பினர் நேற்று கமிஷனரிடம் வழங்கினர். அவர்கள் சார்பாக கமிஷனர் அந்த தொகையை ராஜரத்தினம் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் காவலர் குடும்பத்தினருக்கு வழங்கினார். உதவியைப் பெற்ற காவலர் குடும்பத்தினர் கமிஷனருக்கு கை கூப்பி நன்றி தெரிவித்தனர்.

Translate »
error: Content is protected !!