உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 18 கோடியைத் தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18.07 கோடியைத் தாண்டியுள்ளது.

உலகம் முழுவதும் 180,749,184 பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார தெரிவித்துள்ளது. உலகளவில் 3,915,545 பேர் கொரோனாவால் இறந்ததாகவும், உலகளவில் 165,402,804 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. உலகளவில் தற்போது மருத்துவமனைகளில் 11,430,835 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,464,758 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 618,684 ஆகவும்,கொரோனாவில் இருந்து மீண்டவர்கள்  எண்ணிக்கை 28,871,837 ஆகவும் உள்ளது.

Translate »
error: Content is protected !!