சீனாவில் தோன்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ்(கோவிட்-19) . கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ் மற்றும் துருக்கி முதலிடத்தில் உள்ளன. உலகளவில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18.11 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 16.57 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், கொரோனா வைரஸால் இதுவரை 39.24 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.