உலக சுற்றுலா தளமான கொடைகானலில் சாலைகள் வலு இழந்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி…

உலக சுற்றுலா தளமாக இருக்கக்கூடிய கொடைக்கானல் தன்னுடைய தகுதியை சாலைகள் மூலம் இழந்து வருகிறது. படு மோசமான சாலைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மிகப்பெரிய சுற்றுலா தளம் உலக நாடுகள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தருவது வழக்கம் ..

இந்த வருடம் கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்திருந்தாலும் தற்போது மெல்ல அதிகரிக்க தொடங்கியிருக்கிறார்கள் கடந்த வருடம் 80 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வரை கொடைக்கானலுக்கு வருகை தந்திருந்தார்கள்.

வருடத்திற்கு 50 லட்சம் சுற்றுலாப் பயணிகளுக்கு மேற்பட்டோர் கொடைக்கானலுக்கு வருவது வழக்கம் இப்படி இருக்க கூடிய சூழ்நிலையில் வரக்கூடிய சுற்றுலா பயணிகள் மற்றும் கொடைக்கானலில் இருக்கக்கூடியபொது மக்கள் பெரும்பாலும் மலைச்சாலையே பயன்படுத்துகிறார்கள்.

கொடைக்கானலில் இருக்கக்கூடிய சாலைகள் நெடுஞ்சாலை துறை மற்றும் கொடைக்கானல் நகராட்சி சார்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது பிரதான சாலையான வத்தலகுண்டு – கொடைக்கானல் பழனி – வத்தலகுண்டு சுற்றுலாத்தலங்கள் ஏரிசாலை உள்ளிட்டவை நெடுஞ்சாலைத்துறை சார்பாகவும் நகர்ப்பகுதிகளில் இருக்கக்கூடிய சாலைகள் நகராட்சி சார்பாகவும் பராமரிக்கப்பட்டு வருகிறது… மழை காலங்களில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ,பாறை உருண்டு விழுதல் உள்ளிட்டவைகள போக்குவரத்து பாதிக்கப்படும்.

இதற்கு நிரந்தர தீர்வு இதுவரை எட்டப்படவில்லை .மேலும் தற்போது நாம் பார்க்கக் கூடிய இந்த சாலைகள் கிராமங்களுக்கு செல்லக்கூடிய சாலைகள் அல்ல கொடைக்கானல் நகர்ப்பகுதிகளில் உள்ள சாலைகள் இதில் நெடுஞ்சாலை துறை சார்பாக கோடிக்கணக்கில் சாலைகள் டெண்டர் விடப்படுகிறது .

தற்போது கூட 45 கோடி ரூபாய்க்கு மேல் பராமரிப்பு பணிக்காக கொடைக்கானல் நெடுஞ்சாலைத் துறைக்கு தமிழக அரசு ஒதுக்கி இருக்கிறது இந்த 45 கோடி ரூபாயில் பல்வேறு பணிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது பணிகள் நடை பெற்றாலும் கூட அந்த பணிகள் உரிய நேரத்தில் முடிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது .

முக்கியமாக கொடைக்கானலில் இருந்து பழனிக்கு செல்லக்கூடிய பிரதான சாலையில் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள் ..இந்த சாலை கடந்த பல மாதங்களாகவே பராமரிப்பு பணியில் இருக்கிறது இதனால் அந்த பகுதியில் செல்லக்கூடிய வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கக் கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

சாலை பணிகள் நடைபெறும் இடத்தில் எச்சரிக்கை பலகை வைக்கப்படுவதில்லை மேலும் அந்த இடங்களில் பல்வேறு கனரக வாகனங்கள் சாலை பணிக்காக இயக்கப்படுவதால் மேலும் சாலைகள் நலிவடைய தொடங்குகின்றது ..இதே போன்று பெரும்பாலான மக்கள் பயன்பாட்டில் இருக்கக்கூடிய பாம்பார் புரம் சாலையும் இதேநிலைதான் ஏற்பட்டிருக்கிறது. 

மேலும் இந்த 45 கோடி ரூபாய்க்கு வேலை கொடுக்கப்பட்டாலும் இந்த வேலைகளை முறையாக அதிகாரிகள் கவனிப்பதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது பெயரளவுக்கு முடிக்கக்கூடிய இந்த வேலைகள் அடுத்த மழை காலம் வரும் முன் மீண்டும் அதே வேலை வருவதாக கொடைக்கானல் மக்கள் குற்றம் சாட்டிவருகிறார்கள்.

இது மட்டுமல்லாது பல்வேறு சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிப்பதால் கொடைக்கானலுக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் விபத்திலும் பழுதடைந்து ஆங்காங்கே நிற்கக்கூடிய ஒரு சூழ் நிலையும் ஏற்பட்டிருக்கிறது அதிகாரிகள் முறையாக இந்த சாலை பணிகளை கவனிக்காததால் இதுபோன்ற நிலை கொடைக்கானலில் பல வருடங்களாகவே தொடர்கிறது என்று கோடை மக்கள் குமுறுகிறார்கள்.

மேலும் கொடைக்கானலில் நடைபெறக்கூடிய டெண்டர்கள் ஆளும் கட்சியினர் பெரும்பாலும் எடுத்துக் கொள்வதால் அந்த வேளையில் அதிகாரிகள் முறையாக கவனிப்பதில்லை ..மேலும் உலக சுற்றுலா தளமாக இருக்கக்கூடிய கொடைக்கானலில் அடிப்படை வசதிகளில் ஒன்றாக இருக்கக்கூடிய சாலை வசதியை முழுவதுமாக மேம்படுத்தி உலக மக்கள் அனைவரும் வந்து சென்று பார்ப்பதற்கு எந்த ஒரு தடையும் இல்லாமல் ஏற்படுத்தித் தரவும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பணிகளை உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட வேண்டும் எனவும் கோரிக்கை வலுத்துள்ளது.

 

 

 

Translate »
error: Content is protected !!