சென்னை நகரில் ஊரடங்கு காலத்தை சாதகமாக பயன்படுத்தி சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் படி சமூக விரோதிகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
வேளச்சேரி காவல் நிலையத்திற்குட்பட்ட 9 வது தெரு டிஎன்எச்பி காலனியில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பணை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வேளச்சேரி இன்ஸ்பெக்டர் ஜோக்கிம் ஜெர்ரி தலைமையில் உதவி ஆய்வாளர் விமல், தலைமை காவலர் அச்சுதராஜ், காவலர் மணிகண்டன் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த ஜானகிராமன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தீவிரமாக கண்காணித்தனர்.
இதில் வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த காமராஜபுரம் பகுதியை சேர்ந்த கார்த்திக் ராஜா (வயது 25), கார்த்திக் (எ) மாஸ் கார்த்திக் (வயது 28) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் இருவரும் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மதுகடைகள் மூடப்பட்டுள்ளதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பெங்களுருவில் இருந்து மதுபானங்களை கடத்தி வந்து வேளச்சேரி பகுதியில் அதிக விலைக்கு விற்க முற்பட்டது தெரிய வந்தது.
மேலும் அவர்களிடம் இருந்து 288 மதுபானங்களை கைப்பற்றி இருவரையும் நீதி மன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர். ஊரடங்கு விதிமுறைகளை மீறி சட்ட விரோதமாக மதுபானங்களை விற்க முயன்ற நபர்கள் இவரையும் கைது செய்தமைக்கு தனிப்படையினரை கமிஷனர் சங்கர் ஜிவால் காவல்துறை உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினார்கள்.