கொரோனா ஊரடங்கு உத்தரவை மீறி கொடைக்கானலில் வனப்பகுதிக்குள் ட்ரக்கிங் சென்ற சுற்றுலாப்பயணிகள் உள்பட 10 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
தமிழகத்தில் கொரொனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது..இந்நிலையில் கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.
தொடர்ந்து கொரோனா தடை உத்திரவை மீறி வருபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொடைக்கானல் அருகே கீழ்மலை பகுதியான வடகவுஞ்சி பகுதியில் இருந்து செம்பரான்குளம் வரை வனப்பகுதியின் வழியே சுற்றுலாப்பயணிகள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த சிலர் ட்ரெக்கிங் சென்றுள்ளனர்.
அவர்கள் செல்லும் வழியில் புகைப்படம் எடுத்து சமூக வலையதலங்களில் பரப்பி உள்ளனர். இவர்களின் பதிவுகளை கண்ட அப்பகுதி மக்கள் இவர்கள் மீது சந்தேகமடைந்து கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் ரோந்து பணியில் ஈடுபட்ட கொடைக்கானல் காவல் துறையினர் வடிவேல் , கோபிநாத், முத்து , ஆனந்த், வினோத்குமார் , மணிகண்டன் ,விஜயராகவன் , கண்ணன் , ஜெயபிரகாஸ் , பிரத்விராஜ் ஆகிய 10 பேரை கைது செய்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.. தொடர்ந்து அவர்கள் பயண்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துமீறி வனப்பகுதிக்குள் சுற்றுலாபயணிகள் சிலர் செல்வதற்கு வனத்துறையே முக்கிய காரணம் என அப்பகுதிமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் 8 வனசரகங்களில் 4 வனசரக அலுவலர்கள் மட்டுமே இருப்பதாகவும் 3 ஆண்டுகளாக உதவி வனப்பாதுகாவலர் பணியிடம் நிறப்படாமல் இருப்பதும் இது போன்ற குற்றங்கள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கின்றனர். எனவே கொடைக்கானல் வனசரகத்திற்கு உள்பட்ட பகுதிக்கு உடனே அலுவலர்களை நியமிக்க வேண்டுமென கோரிக்கையும் எழுந்துள்ளது.