எஸ்ஐ இரவு ரோந்தின் விழிப்புடன் செயல்பட்டதால் கொலை குற்றவாளியிடம் இருந்து திருட்டு செல்போன் பறிமுதல்

இரவு ரோந்தின் போது விழிப்புடன் செயல்பட்டு கொலை குற்றவாளியிடம் இருந்து திருட்டு செல்போன்களை மீட்ட எஸ்ஐ, காவலரை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பாராட்டினார்.

சென்னை, கண்ணகிநகர், எழில்நகர் பகுதியில் கண்ணகி நகர் எஸ்ஐ ஜெயசேகரன், காவலர் சையத் நாசர் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு வாலிபர் நடந்து வந்து கொண்டிருந்தார்.

அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்திய போது அவர் கொலை வழக்கு குற்றவாளி என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அவர் பெயர் தவான் என்கிற மசாலா (வயது 20) என்பதும், கடந்த பிப்ரவரி மாதம் கண்ணகி நகரில் தேவகுமார் (வயது 25) என்ற நபரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. அவரிடம் சோதனை  நடத்திய போது அவரிடம் கையில் ஒரு பையும் அதற்குள் செல்போன்கள் மற்றும் ப்ளு டூத் போன்ற பொருட்கள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவை திருடப்பட்டது என தெரியவந்தது.

அதனை அவர் யாரிடம்  திருடினார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரவு ரோந்தில் விழிப்புடன் செயல்பட்டு கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்ததோடு திருடப்பட்ட செல்போன்களையும் மீட்ட ரோந்து போலீசார் எஸ்ஐ ஜெயசேகரன், காவலர் சையத்நாசர் ஆகியோரை  கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வெகுவாக பாாட்டினார்.

 

Translate »
error: Content is protected !!