ஏன் இத்தனை காலம் சினிமாவில் நடிக்கவில்லை…? யார் காரணம்.? கவுதமி விளக்கம்

தமிழ் திரையுலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த கவுதமி தற்போது அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

தமிழ் திரையுலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த கவுதமி தற்போது அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-

நான் சினிமாவுக்கு வருவேன் என்றோ அரசியலில் ஈடுபடுவேன் என்றோ நினைத்து பார்க்கவில்லை. ஆந்திராவில் பிறந்த நான் எம்.பி. படிக்க வேண்டும் என்ற ஆசையோடு இருந்தேன். ஆனால் குரு சிஷ்யன் படத்தில் நடித்த பிறகு திரும்பி பார்க்கவே நேரம் இல்லை. வருடத்துக்கு 15 படங்கள் வரை நடித்தேன். ஏழரை வருடங்களில் 120 படங்களில் நடித்து விட்டேன்.

அது பெரிய சாதனை. சினிமாவால் வாழ்க்கையில் சில விஷயங்களை இழக்கிறோம் என்று தோன்றியது. அதன்பிறகு சினிமாவை விட்டு விலக முடிவு செய்தேன். திருமணம் ஆகி 3 ஆண்டுகளில் அந்த உறவு அறுந்து போனது. ஆனாலும் எனது வாழ்க்கையில் நான் தனிமையாக இல்லை. எனக்குள்ளேயே நான் இருக்கிறேன்.

எந்த விஷயம் ஆனாலும் எனது மகளிடம் மனம் விட்டு பேசுகிறேன். எனது கடந்த காலம், நிகழ்காலம் எல்லாம் அவளுக்கு தெரியும். எனது மகள் சுப்புலட்சுமிக்கு சினிமாவில் நடிக்க ஆர்வம் இல்லை. கேமராவுக்கு பின்னால் இருக்கத்தான் அவளுக்கு பிடிக்கிறது. சினிமாவில் நடிக்க வேண்டும் என்றாலும் எனக்கு ஆட்சேபனை இல்லை. எல்லாம் அவளுடைய விருப்பம்தான்.. இத்தனை காலம் சினிமாவில் நடிக்காமல் இருந்ததற்கு எனது மகள்தான் காரணம். இப்போது அவள் செட்டிலாகி விட்டதால் இனிமேல் சினிமாவில் நடிக்க நான் தயாராக இருக்கிறேன்.”

 

Translate »
error: Content is protected !!