கோரோனோவால் ஏழைகளுக்கு உதவ நடிகர் சோனுசூட் 10 கோடி சொத்துக்களை அடமானம் வைத்த்தாக தகவல் வெளியாகியுள்ளது .
இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர். பலர் நடந்தே சொந்த ஊருக்கு செல்லும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டனர். அந்தசமயத்தில் அவர்களை சொந்த மாநிலங்களுக்கு சிறப்பு பேருந்துகள், விமானங்களில் அனுப்பி நடிகர் சோனுசூட் உதவினார். தொடர்ந்து தன்னை தொடர்பு கொண்டு உதவி கேட்பவர்களுக்கு முடிந்தவரை பொருளாதார உதவி செய்து வருகிறார். இதனால் ஊரடங்கின் ரியல் ஹீரோ என மக்களால் அவர் கொண்டாடப்பட்டார்.
இந்நிலையில் ஏழை மக்களுக்கு உதவுவதற்காக தனது மற்றும் மனைவி சோனாலி பெயரில் உள்ள இரு கடைகள் மற்றும் 6 குடியிருப்புகளின் பத்திரங்களை மும்பை ஜூகுவில் உள்ள ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கியிடம் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி ரூ. 10 கோடிக்கு அடமானம் வைத்து லோன் கேட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.