ஐபிஎஸ் அதிகாரிகள் பெயரில் பேஸ்புக்கில் பண மோசடி: இருவர் கைது

ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயரை பயன்படுத்தி பேஸ்புக்கில் பணம் மோசடி செய்த ராஜஸ்தானைச் சேர்ந்த இருவரை சென்னை மத்தியக்குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் கமிஷனர் தினகரன், ஏடிஜிபிக்கள் ரவி, சந்தீப்ராய் ரத்தோர், இணைக்கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் உதவிக்கமிஷனர்கள் அருள் சந்தோஷமுத்து ஆகியோர் பெயரில் போலி பேஸ்புக் பக்கங்கள் இயங்கி வந்தன. அவர்கள் பணக்கஷ்டத்தில் உள்ளதாகவும் பணம் அனுப்பி உதவி செய்யுங்கள் என்று அந்த பேஸ்புக்கில் மர்ம நபர்கள் பிரபல ஐபிஎஸ் அதிகாரிகள் பேஸ்புக் சாட்டிங்கில் இருந்து பணம் பெற்று மோசடி செய்தனர். இது தொடர்பாக சென்னை மாதவரம் உதவிக்கமிஷனர் அருள்சந்தோஷமுத்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் தேன்மொழி, துணைக்கமிஷனர் நாகஜோதி, இன்ஸ்பெக்டர் வினோத்குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இதில் இந்த மோசடிச் செயலில் ஈடுபட்டவர்கள் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டம் பஹரி தாலுக்காவிலிருந்து செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இதே போல பேஸ்புக்கில் பணம் கேட்டு மோசடியில் ஈடுபட்டதாக முஸ்தகீன்கான் மற்றும் ஒரு சிறுவன் ஆகிய இரண்டு பேருக்கு சென்னை வழக்கில் தொடர்பிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து சென்னை சைபர்கிரைம் போலீசார் முஸ்தகீன்கானை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இதில் ராஜஸ்தானைச் சேர்ந்த ஷகீல்கான், ரவீந்திரகுமார் ஆகியோர் இந்த பேஸ்புக் மோசடியில் ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயரில் போலி பேஸ்புக் தொடங்கி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

அதனையடுத்து கூடுதல் துணை ஆணையாளர்- சரவணக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் துரை, வினோத்குமார் அடங்கிய தனிப்படை போலீசார் கடந்த ஒரு வாரமாக ராஜஸ்தான் சென்று ஷகீல்கான், ரவீந்தர்குமார் ஆகிய இருவரை கைது செய்தனர். விசாரணையில் ஷகீல்கான் பேஸ்புக்கில் ஐபிஎஸ் அதிகாரிகளின் புகைப்படத்தை பயன்படுத்தி போலியான முகநூல் கணக்கை அவர்கள் பெயரிலேயே உருவாக்கியுள்ளனர். அதன் மூலம் பணம் மோசடி செய்ய மூளையாக செயல்பட்டு, மோசடியாக கிடைக்கும் பணத்தை ஏற்கனவே போலியாக உருவாக்கி வைத்திருக்கும் கூகுள்பே, பேடிஎம் வங்கி கணக்குகளுக்கு மாற்றி பணத்தை ஆட்டையைப் போட்டுள்ளனர். பின்பு தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ரவீந்தர்குமார் என்பவரின் ஸ்வைப் மிஷின் உதவியோடு எடுத்து தங்களுக்குள் பங்கு பிரித்துக் கொண்டனர் போன்ற தகவல்கள் தெரியவந்தன. விசாரணைக்குப்பின்னர் ஷகீல்கான், ரவீந்தர்குமார் மற்றும் முஸ்தகீன்கான் மூவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்தனர்..

Translate »
error: Content is protected !!