டோக்கியோவில் நடைபெறும் 32 வது ஒலிம்பிக் போட்டிகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். ஒலிம்பிக் வரலாற்றில் முதன் முறையாக இந்திய பெண்கள் ஹாக்கி அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இதில், மகளிர் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கப் போட்டிக்காக கடுமையாகப் போராடி இங்கிலாந்திடம் 3-4 என்ற கோல் கணக்கில் தோற்றது. இந்திய அணி பதக்கம் வெல்லும் என்று எதிர்பாக்கப்பட்ட நிலையில் தோல்வியை தழுவியது.
இவர்களின் அபார முயற்சிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் வெளியிட்ட வாழ்த்து செய்தி,
இந்திய மகளிர் ஹாக்கி அணியின் ஆட்டம் பதக்கம் பெற்ற பிறரின் முயற்சிகளுக்கு சற்றும் குறைவில்லாதது. முதன்முறையாக ஒலிம்பிக்கின் அரையிறுதிவரை இந்தியாவை கொண்டுசென்றதற்காகவும் இறுதிவரை போராடியதற்காகவும் பாராட்டுகள்” என தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.