ஓட்டுநர்கள் பணியின் போது செல்போன்களைப் பயன்படுத்தக்கூடாது என்று மாநில போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து மாநில போக்குவரத்துக் கழகம் அனுப்பிய சுற்றறிக்கையின் படி: –
* பணியில் இருக்கும் போது ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆய்வின்போது தங்கள் உரிமத்தை உடன் வைத்திருக்க வேண்டும்.
* ஓட்டுநர்கள் பணியின் போது செல்போன்களைப் பயன்படுத்தக்கூடாது. நடத்துனரிடம் கொடுத்து வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
* டிரைவர்கள் மற்றும் நடத்துனர்கள் இந்த விதிகளுக்கு கட்டுப்பட வேண்டும். இதில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டால் அவர்களே பொறுப்பு. என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது