கமல்ஹாசன் அறுவை சிகிச்சை வெற்றி; நலமாக இருக்கிறார் என தகவல்

சென்னை,

கமல்ஹாசன் உடல்நலம் குறித்து ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து.

இப்போது அப்பா நலமாக இருக்கிறார் என்று தெரிவித்துள்ளனர். நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல், காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாகவும், சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் பணிகளை தொடங்குவேன் என்றும் கூறியிருந்தார்.

சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் நிகழ்ச்சியை முடித்த கையோடு, கமல் ஹாசன் தரப்பில் இருந்து அறிக்கை ஒன்று வெளியானது.

அதில், காலில் அறுவை சிகிச்சை செய்ய இருப்பதால், தற்காலிகமாக ஓய்வில் செல்ல இருப்பதாக தெரிவித்திருந்தார். ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தார்கள், அதை மீறித்தான் சினிமா வேலைகளும் அரசியல் வேலைகளும் தொடர்ந்ததாகவும் கூறி இருந்தார்.

மேலும் பிரச்சாரத்தைத் தொடங்கும்போதே காலில் நல்ல வலி இருந்தது என்றும் இப்போது சிறிய ஓய்வு கிடைத்திருக்கிறது. ஆகவே, காலில் ஒரு சிறு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறேன். அதுவரையில் இணையம் வழியாகவும் வீடியோக்கள் வழியாகவும் பேசுவேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று நடிகர் கமல் ஹாசனுக்கு அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. இதுகுறித்து மகள்கள் ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “இன்று காலையில் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில், மருத்துவர் ஜே எஸ்.என். மூர்த்தி அவர்களது ஒருங்கிணைப்பில், எலும்பியல் அறுவைச் சிகிழ்ச்சை நிபுணர் மருத்துவர் மோகன்குமார் தலைமையில் அப்பாவிற்கு காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது அப்பா நலமாக உற்சாகமாக இருக்கிறார்.

அப்பாவை மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் மருத்துவமனை நிர்வாகமும் நல்ல முறையில் பார்த்துக்கொள்கிறார்கள். நான்கைந்து நாட்களுக்குப் பின் அப்பா வீடு திரும்புவார். சில நாட்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் மக்களைச் சந்திப்பார். மகிழ்விப்பார் அனைவரது அன்பிற்கும் பிரார்த்தனைகளுக்கும் எங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

 

Translate »
error: Content is protected !!