கர்நாடகாவில் இன்று முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்–மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிப்பது பற்றியும், பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்தும் இன்று ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையில் முதல்–மந்திரி எடியூரப்பா, சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் முதல்–மந்திரி எடியூரப்பா கூறியது, கர்நாடகவில் இன்று முதல் ஜனவரி 2ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுத்தப்படுகிறது. இரவு 10 முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும். இதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் இரவு நேர ஊரடங்கு அமலில் இருப்பதால் புத்தாண்டு கொண்டாட்டங்களை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று கூறினார்.