கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

இன்று கலைஞரின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு பல மக்கள் நலத் திட்டங்களை முதல்வர் -அமைச்சர் ஸ்டாலின் இன்று துவக்கி வைக்க உள்ளார்.

சென்னை,

இன்று தி .மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதியின் 97-வது பிறந்த நாள். தமிழகம் மட்டும் அல்ல இந்திய முழுவதும் கொண்டாடும் அளவிற்கு மிக சிறந்த அரசியல்வாதியாக, பலருக்கு ஒரு உதாரணமாக வாழ்ந்தவர் கலைஞர் கருணாநிதி.

மேலும் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு பல மக்கள் நலத் திட்டங்களை முதலமைச்சர் இன்று துவக்கி வைக்க உள்ளார்.

கருணாநிதி நினைவிடத்தில் ‘போராளியின் வழியில் தொடரும் வெற்றி பயணம்’ என அலங்கரிக்கப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து , சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.  முதல்வர் ஸ்டாலினை தொடர்ந்து துரைமுருகன்,  உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு,  டி.ஆர்.பாலு, கனிமொழி, சேகர் பாபு, உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Translate »
error: Content is protected !!