தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது,
கல்லூரி மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்கும். 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். பல்கலைக்கழகங்களில் வெளிப்படைத்தன்மை அவசியம். அனைத்து பல்கலைக்கழகங்களும் ஒரே நடைமுறையை பின்பற்ற வேண்டும். பேராசிரியர்கள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மையைப் பின்பற்ற வேண்டும். அனைத்து பல்கலைக்கழகங்களிலும் எம்.பில். படிப்பை தொடர வேண்டும். அண்ணா பல்கலைக்கழக மாநாடு ஒற்றை சாளர முறையில் நடத்தப்படும் என கூறினார்.