காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள கோமா நகரம். தொழில் நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல், ஜன நெருக்கடி மிகுந்ததாகும்.
இந்த நகரை ஒட்டி ‘மவுன்ட் நிரயகாங்கோ’ எனும் பெரிய எரிமலை உள்ளது. கடந்த சில தினங்களாக அதிக சீற்றத்துடன் காணப்பட்ட இந்த எரிமலை நேற்று இரவு முதல் வெடித்துச் சிதறி நெருப்புக் குழம்பை கக்கியது.
இதனால் அந்த பகுதியில் கடுமையான வெப்பம் மற்றும் புகை மண்டலம் சூழ்ந்தது. எரிமலை வெடித்ததையடுத்து கோமா நகரில் இருந்து பொதுமக்களை வெளியேற்றப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பொதுமக்கள் வெளியேறிய பகுதிகளில் நெருப்புக் குழம்பு சூழ்ந்ததால் ஏராளமான வீடுகள் சாம்பலாகி உள்ளன. உயிரிழப்பு எதுவம் ஏற்படவில்லை.