பிப்ரவரி 14ஆம் தேதி கொண்டாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்…போலீஸ் கமிஷனரிடம் இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் மனு

பிப்ரவரி 14 காதலர் தின கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பாக இந்து மக்கள் கட்சியின் மாநில அலுவலர் செயலாளர் குமரவேல் சார்பில் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனு விவரம்:

காதலர் தினம் என்ற பெயரில் பிப்ரவரி 14-ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள பூங்காக்கள், சுற்றுலாத்தலங்களில் மது அருந்தி விட்டு நடக்கும் காமக்களியாட்டங்களுக்கு காவல்துறை தடை விதிக்க வேண்டும். அது தொடர்பாக தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனியார் பண்பலை வானொலிகளில் அன்றைய தினம் முன்பின் தெரியாதவர்களுக்கு போன் செய்து நான் உங்களை காதலிக்கிறேன் என்று சொல்லி குடும்பத்தில் குழப்பத்தை விளைவிக்கும் நிகழ்ச்சிகளுக்கும் தடைவிதிக்க வேண்டும்.

மேலும் வியாபார நிறுவனங்களில் காதலர் தின சிறப்பு விற்பனை எனச் சொல்லி குறைந்த விலையில் உள்ள பொருட்களை, நகைகளை அதிக விலைக்கு விற்கும் மோசடிச் செயல்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகவே பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுகின்ற ஆபாச காதலர் தின கொண்டாட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும்’’ இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!