காரில் தவற விட்ட செல்போனை டுவிட்டர் மூலம் மீட்டுக் கொடுத்த போலீஸ் கமிஷனர்

காரில் தவற விட்ட செல்போன் தொடர்பாக டுவிட்டர் மூலம் தகவல் வந்ததன் பேரில் சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் 3 மணி நேரத்தில் மீட்டுக் கொடுத்து பாராட்டுக்களை குவித்துள்ளார்.

சென்னை, அயனாவரம், குன்னூர் ஐரோட்டைச் சேர்ந்தவர் தேவன் பரத் தோஷி. நேற்று முன்தினம் இரவு சென்னை நகர காவல்துறையின் ட்விட்டர் பக்கத்தில் பரபரப்பான ஒரு பதிவை போட்டார். ‘‘எனது தந்தை கால்டாக்சியில் அவரது மொபைலைத் தவறவிட்டு விட்டார். கார் டிவைரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதால் அதனை மீட்க முடியவில்லை. தயவு செய்து கண்டுபிடித்து தாருங்கள்’’ என்பதுதான் அவர் போட்ட போஸ்ட். அத்துடன் அந்த காரின் பதிவெண், டிரைவரின் செல்போன் எண்ணையும் குறிப்பிட்டிருந்தார். அந்த ட்டுவீட்டை பார்த்த சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் அந்த செல்போனை மீட்பது குறித்து சென்னை நகர காவல்துறைக்கு உடனடியாக போலீஸ் மைக் மூலம் உத்தரவிட்டார். மேலும் அந்த பதிவை டுவிட்டரில் போட்ட தேவன் பரத் தோஷிக்கு விரைந்து உதவி செய்யுமாறு சென்னை நகர காவல் சமூக வலைதள காவல்குழுவினருக்கும், போக்குவரத்து காவல் குழுவினருக்கும் தகவல் தெரிவித்தார்.

தேவன் பரத் தோஷி

அதனையடுத்து போக்குவரத்து போலீசார் விரைந்து செயல்பட்டு அந்த கால் டாக்சியின் பதிவெண் மூலம் அதனை கண்டுபிடித்தனர். வாகன சோதனை நடத்தி அந்த கால் டாக்சியை திருமங்கலம் பகுதியில் போக்குவரத்து போலீசார் மடக்கிப் பிடித்தனர். காரில் தவறவிட்ட செல்போனை 3 மணி நேரத்தில் மீட்டு தேவன்பரத் தோஷியிடம் ஒப்படைத்தனர். டுவிட்டரில் தான் போட்ட பதிவை உடனே பார்த்து பதில் அளித்து தனது தந்தையின் தொலைந்து போன செல்போனை மீட்டுக் கொடுத்த கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் மற்றும் சென்னை நகர காவல் குழுவினருக்கு தேவன் பரத் தோஷி நன்றி தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!