காவல் அதிகாரிகளுக்கு புலனாய்வுத்திறனை மேம்படுத்தும் பயிற்சி

சென்னை மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் பணிபுரியும் போலீஸ் அதிகாரிகளுக்கு புலனாய்வு திறனை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு சிறப்புப்பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

சென்னை நகர காவல்துறையில் பணிபுரியும் காவல்அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் புலனாய்வு திறனை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் சிறப்புப்பயிற்சிகள் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்பேரில் சென்னை நகரில் கிழக்கு மண்டல காவல் மண்டலத்தில் உள்ள மயிலாப்பூர் காவல் மாவட்டத்துக்க நேற்று பயிற்சி வகுப்புகள் நடந்தன. மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் காவல் ஆளிநர்களுக்கு நேற்று முன்தினம் காலை 10.00 மணியளவில் மைலாப்பூர், பாரதீய வித்யா பவனில் இந்த புலனாய்வு மேம்பாட்டு திறன் பயிற்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கல்லுாரி விரிவுரையாளர் சிவக்குமார் கலந்து கொண்டார். இந்திய தண்டனை சட்டத்தின் முக்கிய பிரிவுகளும், காவல் துறையின் கடமைகளும் குறித்து அவர் விளக்கிப்பேசினார். இந்நிகழ்ச்சியில் மயிலாப்பூர் காவல் மாவட்ட உதவிக்கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் மற்றும் காவல் நிலையங்களில் இணையதளப்பிரிவில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Translate »
error: Content is protected !!