கியான்வாபி மஸ்ஜித் இடத்தில் சதித்திட்டம்… நாட்டில் பேரழிவு மற்றும் அமைதியின்மைக்கு வழிவகுக்கும் எஸ்.டி.பி.ஐ..!

கியான்வாபி மஸ்ஜித் வீற்றிருக்கும் இடத்தில் இந்திய தொல்லியல் துறை மூலம் அகழ்வாராய்ச்சி நடத்த உத்தரவிட்ட வாரணாசி நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிரான சட்ட போராட்டங்களுக்கு எஸ்.டி.பி.. கட்சி துணை நிற்கும் என்று கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் இல்யாஸ் தும்பே தெரிவித்துள்ளார். மேலும் தேவைப்பட்டால் சட்ட போராட்டத்தில் எஸ்டிபிஐ கட்சி களமிறங்கும் எனவும் தும்பே உறுதிப்பட கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு  சட்டம் விதிகள்) 1991, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 அன்று நாட்டில் உள்ள வழிபாட்டு தலங்கள் எப்படி இருந்ததோ அது அப்படியே இருக்க வேண்டும் என்றும், அதில் மற்றொரு பிரிவினர் எந்த உருமாற்றமும் செய்ய தடை விதித்துள்ளது. மேலும், இந்த சட்டத்தின்படி 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 அன்று வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக நீதிமன்றம் மற்றும் அதிகார மையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் முறையீடுகள் அனைத்தும் கைவிடப்படுகிறது.

ஆகையால் நாட்டில் உள்ள எந்த வழிபாட்டுத் தலங்களிலும் யாரும் தலையிட உரிமை கிடையாதுஎன்று வழிபாட்டு இடங்கள் மீதான உரிமைகள் பற்றிய விளக்கங்கள் மிக தெளிவாக கூறப்பட்டுள்ளது. கியான்வாபி மஸ்ஜித் இடம் தொடர்பான சர்ச்சைகளுக்கு இந்த வழிபாட்டு சட்டத்தினை எஸ்டிபிஐ கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் இல்யாஸ் தும்பே மீண்டும் கோடிட்டு நினைவுப்படுத்திக் காட்டினார்.

மேலும் தும்பே கூறுகையில், “மதவாத பாசிச சக்திகள் அயோத்தி விவகாரங்களை போன்ற மத விடயங்களை கையிலெடுத்து, மக்களை மத ரீதியான மோதல்களில் ஈடுபட தூண்டுகிறது. இதன் மூலம் மக்களை மத ரீதியில் பிரித்து அதன் மூலம் தேர்தல் வெற்றிகளை பெரும் யுக்தியை பயன்படுத்தி வருகிறது. இப்படி மக்களை மத விடயங்களில் திசைத்திருப்புவதினால் மக்கள் யாரும் அரசின் நிர்வாக தோல்வியை பற்றி சிந்திக்கவோ, விவாதிக்கவோ மறந்து விடுவார்கள். இந்த மோசமான சதித்திட்டம் நாட்டில் பேரழிவு மற்றும் அமைதியின்மைக்கு வழிவகுக்கும் என்றும், இது நாட்டின் கண்ணியத்திற்கும் மற்றும் மதிப்பிற்கும் தீங்கு விளைவிக்கும் என்றும் இல்யாஸ் தும்பே எச்சரித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!